இனிமேலாவது தமிழக அரசு... கள்ளச்சாராய விவகாரத்தில் கொந்தளிக்கும் தவெக தலைவர் விஜய்! - Seithipunal
Seithipunal


கள்ளக்குறிச்சி விஷச் சாராயம் குடித்து பலியானவர்களின் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ள நிலையில், பலரும் கவலைக்கிடமாக உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதற்கிடையே, கள்ளக்குறிச்சி விஷச் சாராயம் விவகாரத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வினோத் சாந்தாராம் மேற்பார்வையில் கருணாபுரம் பகுதியில் சிபிசிஐடி விசாரணை தொடங்கி உள்ளது.

விசாரணை அதிகாரியும் கூடுதல் காவல் கண்காணிப்பாளருமான கோமதி, சென்னையில் இருந்து சென்ற டிஎஸ்பி சசிதரன் தலைமையிலான போலீசார் விசாரணையைத் தொடங்கி உள்ளனர்.

இந்நிலையில், நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில் கள்ளச் சாராயம் அருந்திய 25க்கும் மேற்பட்டோர் காலமான செய்தி, மிகுந்த அதிர்சியையும் மன வேதனையையும் அளிக்கிறது. 

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதோடு, உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் முழு உடல்நலம் பெற இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.

கடந்த ஆண்டு இதே நிகழ்வு காரணமாகப் பல உயிர்களை இழந்த துயரத்தில் இருந்து இன்னும் முழுமையாக மீளாத நிலையில், மீண்டும் இப்படியொரு சம்பவம் நிகழ்ந்திருப்பது, அரசு நிர்வாகத்தின் அலட்சியத்தையே காட்டுகிறது.

இது போன்ற சம்பவங்கள் நிகழாத வண்ணம், இனிமேலாவது தமிழக அரசு கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு தடுக்க வேண்டும்" என்று விஜய் வலியுறுத்தியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

TVK Vijay Condemn to TNGovt Kallakurichi Kalasarayam


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->