இரு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: 9 பேர் படு காயம்!
Two cars collide head on in an accident 9 people are seriously injured
ஓய்வு பெற்ற அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் 5 பேர் கும்பகோணத்தில் இருந்து , மயிலாடுதுறையில் நடைபெற்ற திருமண விழாவிற்கு காரில் பயணம் செய்து கொண்டிருந்தனர்.
பிறகு, திருவிடைமருதூர் கோயிலுக்குத் தரிசனம் செய்வதற்காக சென்னையில் இருந்து காரில் 4 பேர் பயணித்து வந்து கொண்டிருந்த நிலையில் எதிர்பாராதவிதமாக திருவிடைமருதூர் பிரதானச் சாலையில் இந்த கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின.
இதில், பயணம் செய்து வந்த 2 கார்களில், ஒரு காரில் ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்துக் கழக பொது மேலாளர்களான கும்பகோணம், மடத்துத் தெருவைச் சேர்ந்த ல.ராஜாராமன் (64), அம்மாசத்திரத்தைச் சேர்ந்த ரு.கிருஷ்ணகுமார்(64), திருநாகேஸ்வரத்தைச் சேர்ந்த கா.ஆதப்பன் (61), ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்துக் கழக ஊழியரான செட்டி மண்டபத்தைச் சேர்ந்த சி.சிவமயில்வேலன்(61) மற்றும் சென்னை, அம்பத்தூரைச் சேர்ந்த ம.ஞானப்பிரகாசம்(61),
மற்றொரு காரில் சோமசுந்தரம் மனைவி தேன்மொழி(32), இவர்களது மகன் நரேன்(4), ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்துக் கழக ஊழியரும், கும்பகோணம், விவேகானந்தன் நகரைச் சேர்ந்தவர் க.நடராஜன் (62), சென்னை, அம்பத்தூர், ராஜீவ்காந்தி நகரைச் சேர்ந்த மு.சோமு (54) பயணித்து வந்த ஆகிய 9 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.
பின்னர், சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார், அவர்களை மீட்டு, கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக திருவிடைமருதூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
Two cars collide head on in an accident 9 people are seriously injured