2 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கத்தில் மாற்றம் - நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


பராமரிப்பு பணிக் காரணமாக சேலம் இரண்டு எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

"சேலம் கோட்டத்தில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் ஆலப்புழா - தன்பாத் எக்ஸ்பிரஸ் ரெயில் மற்றும் எர்ணாகுளம்-பெங்களூரு இன்டர் சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் கோவை செல்லாமல் போத்தனூர், இருகூர் வழியாக செல்லும்.

ஆலப்புழா-தன்பாத் எக்ஸ்பிரஸ் ரெயில் நாளை முதல் வருகிற 30-ந் தேதி வரை கோவை ஜங்ஷன் செல்லாமல் போத்தனூர், இருகூர் வழியாக செல்லும். இந்த ரெயில் மதியம் 12.15 மணிக்கு போத்தனூர் சென்றடையும். அங்கிருந்து மதியம் 12.20 மணிக்கு புறப்பட்டு செல்லும்.

எர்ணாகுளம்- கே.எஸ்.ஆர். பெங்களூரு இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில்  வருகிற 30-ந் தேதி வரை கோவை ஜங்ஷன் செல்லாமல் போத்தனூர், இருகூர் வழியாக செல்லும். இந்த ரெயில் மதியம் 12.47 மணிக்கு போத்தனூர் சென்றடையும். இங்கிருந்து 12.50 மணிக்கு புறப்பட்டு செல்லும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

two express train running change in salem


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->