நாகையில் தீப்பிடித்து எரிந்த வீடுகள் - பாஜக வேட்பாளர் வாக்கு சேகரிப்பில் பரபரப்பு.! - Seithipunal
Seithipunal


மக்களவைத் தேர்தலில் நாகப்பட்டினம் தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் எஸ்.ஜி.எம்.ரமேஷ் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் தீவிர வாக்கு சேகரிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் இன்று அவர், புதிய நம்பியார் நகர் மீனவ கிராமத்திற்கு தேர்தல் பிரசாரத்திற்காக சென்றுள்ளார். 

அங்கு அவருக்கு பா.ஜ.க.வினர் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது வெடிக்கப்பட்ட பட்டாசுகள் எதிர்பாராதவிதமாக சாலையோரம் இருந்த குடிசை வீட்டின் மீது விழுந்ததால், வீட்டின் கூரை முழுவதும் பற்றி எரிந்தது. மேலும், அருகாமையில் உள்ள வீட்டின் கூரையின் மீதும் தீப்பற்றியது. 

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும், சம்பவ இடத்தில் ஆய்வு செய்த வருவாய் அலுவலர், சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார். 

இந்த தீ விபத்தில் இரண்டு வீட்டிலும் உள்ள பல லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாகியது. பாஜக வேட்பாளர் வாக்கு சேகரிக்கும் போது வீடு தீப்பிடித்து எரிந்த சம்பவம் நாகையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

two house fire accident in nagapatinam


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->