#மதுரை || புகையிலை பொருட்கள் விற்பனை செய்த இரண்டு பேர் கைது.! - Seithipunal
Seithipunal


மதுரையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இந்த தகவலையடுத்து காவல் துறையினர் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டதில், அவனியாபுரம் பெரிய நகர் அருகே, சந்தேகத்தின் அடிப்படையில் அங்கு நின்றிருந்த காரில் சோதனை மேற்கொண்டனர்.

அதில் தடை செய்யப்பட்ட 124.320 கிலோ புகையிலை பொருட்கள் இருந்ததை கண்டுபிடித்துள்ளனர்.

மேலும் காரில் இருந்த இரண்டு பேரை பிடித்து விசாரணை செய்ததில், அவர்கள் மதுரை அய்யர் பங்களா பகுதியை சேர்ந்த ராஜா மற்றும் தத்தனேரி அருள்தாஸ்புரத்தை சேர்ந்த பாலமுருகன் என்பதும், அவர்கள் புகையிலை பொருட்கள் விற்பனை செய்ததும் தெரியவந்துள்ளது.

இதையடுத்து அவர்கள் இரண்டு பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 15 ஆயிரம் ரூபாயும், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் வாகனத்தை பறிமுதல் செய்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Two people were arrested for selling tobacco in madurai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->