பேருந்து நிலையத்தில் ஆக்டிங் ஓட்டுனருக்கு கத்திக் குத்து - நெல்லையில் பரபரப்பு.!!
two peoples arrested for attack acting driver in tirunelveli bus stand
திருநெல்வேலி மாவட்டம் கருங்குளத்தை சேர்ந்த லாரி ஓட்டுநரான சுந்தர்ராஜ் மகன் ஆம்ஸ்ட்ராங் என்பவர் நேற்று முன்தினம் சந்திப்பு பேருந்து நிலையத்தில் பேருந்திற்கு ஆக்டிங் டிரைவர் வேலைக்காக சென்றுள்ளார். அன்று இரவு ஆம்ஸ்ட்ராங் சந்திப்பு பேருந்து நிலையத்தில் நிறுத்தியிருந்த ஒரு தனியார் பேருந்தில் ஏறிப்படுத்துள்ளார்.
அப்போது, உத்தமபாண்டியகுளத்தைச் சேர்ந்த சுடலைமணி மகன் வேல்ராஜ் மற்றும் வசவபுரத்தைச் சேர்ந்த ஆச்சிமுத்து மகன் ரமேஷ் உள்ளிட்ட இரண்டு பேரும் அந்த தனியார் பேருந்தை இயக்கியுள்ளனர். உடனே விழித்துக்கொண்ட ஆம்ஸ்ட்ராங், ஏன் டிரைவருக்கு தெரியாமல் பேருந்தை எடுக்கிறீர்கள் என்று கேட்டுள்ளார்.

அதற்கு ஆம்ஸ்ட்ராங்கை, பேருந்தை இயக்கிய இருவரும் அவதூறு வார்த்தைகளால் பேசி, நெல்லை சந்திப்பு தேவர் சிலை அருகில் பேருந்தை நிறுத்தி, மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தி, கொலை மிரட்டல் விடுத்து விட்டு அங்கிருந்துச் சென்றுள்ளனர்.
இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து ஆம்ஸ்ட்ராங்கை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்தச் சம்பவம் தொடர்பாக ஆம்ஸ்ட்ராங் அளித்த புகாரின்பேரில் நெல்லை சந்திப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்து, தாக்குதல் நடத்திய 2 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
two peoples arrested for attack acting driver in tirunelveli bus stand