சாலை பணிக்கு தோண்டிய பள்ளம் - பள்ளி மாணவிகளின் உயிரை பறித்த சம்பவம்.! - Seithipunal
Seithipunal


திருப்பத்தூர் || சாலை பணிக்கு தோண்டிய பள்ளம் - பள்ளி மாணவிகளின் உயிரை பறித்த சம்பவம்.!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடியை அடுத்த சிக்கனாங்குப்பம் கிராமத்திலிருந்து அதே பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளிக்கு சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக, சிக்கனம்குப்பம் அரசு உயர்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் பத்து அடிக்கு மேல் பள்ளம் தோண்டி அங்கிருந்த முரம்பு மண்ணை எடுத்து சாலை பணிக்காக பயன்படுத்தியுள்ளனர். 

இந்தப் பள்ளத்தில், கடந்த 4 நாட்களாக பெய்த கனமழை காரணமாக மழை நீர் தேங்கி இருந்தது. இந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை பள்ளி முடிந்ததும் வீட்டிற்குச் சென்ற, சிக்கனாங்குப்பம் ராசன் வட்டம் பகுதியை சேர்ந்த கோவிந்தராஜின் மகள் மோனிகா, வேலு மகள் ராஜலட்சுமி, மணிவேல் உள்ளிட்டோர் வீட்டிற்கு சென்று விட்டு மீண்டும் பள்ளிக்கு வந்தனர். 

அங்கு அவர்கள் பள்ளத்தில் தேங்கிய மழைநீரில் குளித்துக் கொண்டிருந்தபோது கரைக்கு வந்த மணிவேல் 2 மாணவிகளும் மேலே வராததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதுகுறித்து அந்த பகுதியில் இருந்தவர்களிடம் தெரிவித்துள்ளார். இதைக்கேட்டு அங்கு ஓடி வந்த பொதுமக்கள் நீரில் மூழ்கிய 2 சிறுமிகளையும் மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். 

அங்கு அவர்களை பரிசோதனை செய்த மருத்துவர்கள் இருவரும் இறந்து போனதாக தெரிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் 2 மாணவிகளின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையே உயிரிழந்த குழந்தைகளின் குடும்பத்தினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தியும் அவர்கள் போராட்டத்தைக் கைவிடுவது போல் தெரிய வில்லை. இதையறிந்த வாணியம்பாடி உதவி ஆட்சியர் மற்றும் தாசில்தார் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சம்பந்தப்பட்ட பள்ளியில் தோண்டப்பட்ட குழியை உடனடியாக மூட நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். 

இருப்பினும் 2 மாணவிகள் நீரில் மூழ்கி பலியான சம்பவம் குறித்து மாணவிகளின் பெற்றோர் புகார் அளித்தனர். அந்தப் புகாரின் படி சாலை அமைக்கும் பணி ஒப்பந்ததாரர் தெக்குப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பாலாஜி, சிக்கனாங்குப்பம் ஊராட்சி செயலாளர் தேவன், சிக்கனாங்குப்பம் அரசு பள்ளி தலைமை ஆசிரியை (பொறுப்பு) கெஜலட்சுமி, கிராம நிர்வாக அலுவலர் காசிநாதன் உள்பட சிலர் மீது பணியில் அஜாக்கிரதையாக இருந்ததாகவும், தகுந்த பாதுகாப்பு செய்யப்படாமல் இருந்ததாகவும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

two school students died drowned water in tirupathur


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->