ஐஏஎஸ் அதிகாரியின் மனைவிக்கு அபராதம் - 2 போலீசார் இடைநீக்கம்.! - Seithipunal
Seithipunal


சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் கடந்த 18 ஆம் தேதி இரவு போக்குவரத்து போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக காரில் வந்த ஐஏஎஸ் அதிகாரி ஒருவரின் மனைவி போக்குவரத்து விதிகளை மீறியுள்ளார். 

இதைக் கவனித்த பணியில் இருந்த இரு போக்குவரத்து காவலர்கள் அவர் மீது வழக்கு பதிவு செய்து அபராதம் விதித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த ஐஏஎஸ் அதிகாரியின் மனைவி சம்பவம் குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன் பின்னர் இந்தச் சம்பவம் குறித்து உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். 

அந்த விசாரணையில் சம்பவத்தன்று வழக்குப் பதிவு செய்த காவலர்கள் திருவல்லிக்கேணி போக்குவரத்து பிரிவில் பணியாற்றி வரும் சிறப்பு உதவி ஆய்வாளர் சிவலிங்கம் மற்றும் காவலர் கென்னடி என்பது தெரியவந்தது. மேலும், அவர்கள் தங்கள் எல்லைக்குட்பட்ட பகுதியை தாண்டி சம்மந்தம் இல்லாமல் ஆயிரம் விளக்கு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டதுடன் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்ததும் கண்டு பிடிக்கப்பட்டது. 

இதையடுத்து போக்குவரத்து இணை ஆணையர் மகேஷ்குமார், சிறப்பு உதவி ஆய்வாளர் சிவலிங்கம் மற்றும் காவலர் கென்னடி ஆகிய‌ இருவரையும் தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

two traffic police suspend for fine to IAS officer wife


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->