மதுரையில் பயங்கரம் : காதலுக்காக அத்தை, பாட்டி கொலை - விசாரணையில் சிக்கிய பேரன்.!  - Seithipunal
Seithipunal


மதுரையில் பயங்கரம் : காதலுக்காக அத்தை, பாட்டி கொலை - விசாரணையில் சிக்கிய பேரன்.! 

மதுரை மாவட்டத்தில் உள்ள எல்லீஸ் நகர் போடி பகுதியைச் சேர்ந்தவர்கள் மணிகண்டன் - அழகுப்பிரியா தம்பதியினர். இந்த நிலையில் மணிகண்டனின் தாய் மற்றும் அவருடைய மனைவி இருவரும் வீட்டின் பின்புறம் உள்ள பழைய பொருட்கள் சேமிக்கும் குடோன் பகுதியில் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தனர். 

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் சம்பவம் குறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். அந்தத் தகவலின் படி விரைந்து வந்த போலீசார் இருவரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதன் பின்னர் போலீசார் சம்பவம் குறித்து நடத்திய விசாரணையில் மணிகண்டனின் சகோதரி மகன் குணசீலன் என்பவர் இருவரையும் கொலை செய்தது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து போலீசார் குணசீலனிடம் விசாரணை நடத்தியதில் அவர் கல்லூரியில் படிக்கும் பெண்ணை காதலித்து வந்துள்ளார். அதனை குணசீலனின் பாட்டி மற்றும் அத்தை கண்டித்துள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த அவர் தனது நண்பர் ரிஷியின் உதவியுடன் அவர்கள் இருவரையும் கொலை செய்ததாக தெரிவித்தார். இதையடுத்து போலீசார் இருவரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

two youths arrested for murder case in madurai


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->