திருப்பூரில் சோகம் - அரசு பேருந்து மோதி 2 இளைஞர்கள் பலி.! - Seithipunal
Seithipunal


திருப்பூர் அருகே இருசக்கர வாகனத்தின் மீது அரசுப் பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் ஊர்க்காவல் படை வீரர் உள்பட இரண்டு பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கயம் அடுத்த முத்தூர் வரட்டுகரை பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல் மகன் சத்தியமூர்த்தி. இவர் வெள்ளகோவில் காவல் நிலையத்தில் ஊர்க்காவல் படையில் பணிபுரிந்து வந்தார்.

இந்த நிலையில் சத்தியமூர்த்தி நேற்று தனது உறவுக்கார பையனான சூர்யா என்பவருடன் சேர்ந்து படியூரில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்திற்காக சென்றுள்ளார். 

அதன் பின்னர் இருவரும் அங்கிருந்து நேற்று இரவு இருசக்கர வாகனத்தில் காங்கயம் நோக்கி வைத்துக் கொண்டிருந்தனர். அப்போது காங்கயத்தில் இருந்து திருப்பூர் நோக்கிச் சென்ற ஒரு அரசு மாநகர பேருந்து ஒன்றை, மற்றொரு அரசு மாநகர பேருந்து முந்திச் செல்ல முயன்றது. அந்த நேரத்தில்,அந்த பேருந்து  சத்தியமூர்த்தி மற்றும் சூர்யா சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. 

இதில், சத்தியமூர்த்தி மற்றும் சூர்யா இருவரும் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் இரண்டு பேரையும் மீட்டு காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவர்களை பரிசோதனை செய்த மருத்துவர்கள் இரண்டு பேரும் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் இந்த விபத்து குறித்து காங்கயம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காங்கயம் அருகே அரசு பஸ் -மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஊர்க்காவல் படை வீரர் உள்பட ,2 பேர் உயிரிழந்த சம்பவம் காங்கயம் பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

two youths died for bike accident in thirupur kangeyam


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->