உதயநிதி துணை முதலமைச்சராக பொறுப்பு ஏற்பது எப்போது? அடித்து சொன்ன அமைச்சர்!
Udhay Deputy CM Post DMK
உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக பொறுப்பு ஏற்பது குறித்த அறிவிப்பு நாளை கூட வெளியாகலாம், இன்னும் பத்து நாட்களில் உறுதியாக வெளியாகலாம் என்று, திமுக அமைச்சர் அன்பரசன் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பரசனிடம் செய்தியாளர்கள், அமைச்சர் உதயநிதி துணை முதலமைச்சர் ஆக எப்போது அறிவிக்கப்படுவார் என்பது குறித்து கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதில் அளிக்க அவர், நாளை கூட அறிவிப்பு வெளியாகலாம், இன்னும் ஓரிரு நாட்களில் கூட அந்த அறிவிப்பு வெளியாகலாம்.
நிச்சயமாக அடுத்த 10 நாட்களில் அமைச்சர் உதயநிதி துணை முதலமைச்சராக அறிவிக்கப்படுவார். இன்னும் பத்து நாட்களில் துணை முதலமைச்சர் ஆக உதயநிதி பதவி ஏற்பார் என்று திட்டவட்டமாக அன்பரசன் தெரிவித்தார்.
கடந்த 2018 அரசியல் பயணத்தை தொடங்கிய உதயநிதி ஸ்டாலின், 2019 ஆம் ஆண்டு திமுகவின் இளைஞர் அணி செயலாளர் பதவியில் நியமிக்கப்பட்டார்.
அதனை தொடர்ந்து 2021 சட்டமன்ற தேர்தலில் எம்எல்ஏவாக வெற்றி பெற்ற உதயநிதி ஸ்டாலின், 2022 ஆம் ஆண்டு அமைச்சராக பொறுப்பேற்றார்.
இந்த நிலையில், உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சர் ஆக பொறுப்பேற்க வேண்டும் என்று, அக்கட்சியின் அமைச்சர்களும், மூத்த நிர்வாகிகளும் குரல் கொடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.