இந்த முறை 2 லட்சம் வாக்கு! உதயநிதி சொன்ன வார்த்தை! உற்சாகத்தில் கதிர் ஆனந்த்!  - Seithipunal
Seithipunal


வேலூர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து வாணியம்பாடி பகுதியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார்.

மாநாட்டுக்கு நிகராக கூடியிருந்த மக்கள் மத்தியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது, "இந்த வேலூர் நாடாளுமன்றத் தொகுதிக்கும், எனக்கும் மிகப்பெரிய ஒரு நெருக்கம் உள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு நான் திமுகவின் உறுப்பினர் மட்டுமே. என்னுடைய முதல் பிரச்சாரக் கூட்டத்தை சகோதரர் கதிர் ஆனந்துக்காக இதே வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் தான் நான் தொடங்கினேன். 

அப்போது கழகத்தின் பொதுச்செயலாளர் அண்ணன் துரைமுருகன் அவர்கள் என்னை தட்டிக் கொடுத்து, நல்லா பிரச்சாரம் பண்ணிட்டு வா என்று அனுப்பி வைத்தார்.

இன்று, சட்டமன்ற உறுப்பினராகி, இளைஞரணி தலைவராகி, அமைச்சராகி உங்க முன்னால வந்து நிற்கிறேன்.

நான் இப்பவும் சொல்றேன், இங்க அமைச்சராகவோ, இளைஞரணி செயலாளராகவோ, சட்டமன்ற உறுப்பினராகவோ நான் இங்கு வரவில்லை. சகோதரர் கதிர் ஆனந்த் என்னுடைய காலேஜ் சீனியர், அரசியலுக்கும் கூட அவர் எனக்கு சீனியர் தான். என்று என்று உதயநிதி கூற அப்போது பதறிய கதிர் ஆனந்த் உதயநிதியிடம் நட்பு பாராட்டினார்.

தொடர்ந்து பேசிய உதயநிதி ஸ்டாலின், "அந்த உரிமையில் தான் அவருக்காக நான் உங்களிடம் உதயசூரியன் சின்னத்தில் வாக்கு கேட்டு இங்கு வந்துள்ளேன். 

சென்ற முறை நாடாளுமன்ற தேர்தலில் நீங்கள் கொஞ்சம் சோதித்து விட்டீர்கள். மற்ற தொகுதிகளில் லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் கழக வேட்பாளர்களை வெற்றி பெற்றாலும், வேலூர் மக்களாகிய நீங்கள் வெறும் 8000 வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே அவரை வெற்றி பெற வைத்தது வருத்தம் தான்.

ஆனால் அதற்கெல்லாம் சேர்த்து வைத்து இப்போது இரண்டு, மூன்று லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அவரை வெற்றி பெற செய்து, அவரை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளருக்கு டெபாசிட் இழக்க வைக்க வேண்டும்.

இந்த முறை நீங்கள் ஏமாத்துனீங்கன்னா, நீங்க தான் ஏமாந்து போவீங்க. அதை ஞாபகம் வச்சுக்கோங்க. அதேபோல வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு நம்முடைய கதிர் ஆனந்த அவர்கள் செய்திருக்க கூடிய சாதனைகள் மகத்தானது.

மேலும், வேலூர் மருத்துவமனையை பன்னோக்கு சிறப்பு மருத்துவமனையாக மாற்ற ரூபாய் 150 கோடி ரூபாய் செலவில் புதிய மருத்துவமனை கட்டப்பட்டு வருகின்றது. புதிய தொழில் பூங்கா கட்டுவதற்கு சுமார் 32 கோடி செலவில் பணியில் நடைபெற்று வருகிறது. 

மத்திய அரசு கொண்டுவந்த சிஏஏ, என்ஆர்சி சட்டம் பற்றி உங்களுக்கு தெரியும். அந்த சட்டத்தை ஆதரித்து வாக்களித்த ஒரே கட்சி அதிமுக தான்.

இந்த சட்டத்தை அறிமுகப்படுத்தும் போதே, இந்த சட்டத்தை கிழித்தெறிந்ததற்காக முதல் முறையாக கைது செய்யப்பட்டேன்" என்று உதயநிதி ஸ்டாலின் பேசினார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Udhayanithi campaign for vellore DMK candidate Kathir Anand


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->