கல்லறை பிணத்தை கூட நிம்மதியாக விட மாட்டீங்கலா.? சமாதியை உடைத்து மர்ம நபர்கள் கைவரிசை.!
ulundhurpet arasur graviyard damaged
என்னதான் உழைத்து சம்பாதித்தாலும் கூட, இந்த மனித மனம் அடுத்தவர்களின் பணத்திற்கு தான் ஆசைப்படும். அதை நிரூபிக்கும் விதமாக உளுந்தூர்பேட்டையில் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது.
பிணத்திற்காக கல்லறை கட்டப்பட்டு அதில் விளக்கேற்றுவதற்காக ஒரு பித்தளை விளக்கு கல்லறை கட்டிடத்துடன் சேர்த்து வைத்து கட்டப்பட்டுள்ளது. இதை சில மர்ம நபர்கள் கட்டிடத்தை சேதப்படுத்தி அடித்து, உடைத்து அந்த விளக்கையும் தோண்டி எடுத்துக் கொண்டு சென்றுள்ளனர்.
இந்த கல்லறை கட்டிடம் சேதமாக இருப்பதை கண்ட அப்பகுதிக்கு வந்த சிலர் பார்த்துவிட்டு சம்பந்தப்பட்ட குடும்பத்திடம் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து இந்த விஷயம் அக்கம் பக்கம் இருக்கும் கிராமம் முழுவதும் பரவத் துவங்கியது.
எனவே இந்த இடத்தை காண பொதுமக்கள் பலரும் கூட்டம் கூடி வருகின்றனர். இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து நெட்டிசன்கள் பலரும் கல்லறையில் கூட நிம்மதியாக இருக்க விட மாட்டார்கள் போல? என்று கமெண்ட் போட்டு வருகின்றனர்.
இதுபோல முன்னதாக ஒரு நபர் உடற்பயிற்சி செய்வது போல சில வருடங்களுக்கு முன்பு குண்டு பல்பை திருடி சென்றது குறிப்பிடத்தக்கது.
English Summary
ulundhurpet arasur graviyard damaged