திருமயம் காலபைரவர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சாமி தரிசனம்!! - Seithipunal
Seithipunal


புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் காலபைரவர் கோவிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சாமி தரிசனம். அதனை முன்னிட்டு திருமயம் காலபைரவர் கோவிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு.

மக்களவை தேர்தல் இறுதி கட்டத்தை எட்டி உள்ள நிலையில், ஜூன் ஒன்றாம் தேதி கடைசி கட்ட மக்களவைத் தேர்தலும், ஜூன் நான்காம் தேதி மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் முடிவுகளும் வெளியாக உள்ளது. ஏழாம் கட்ட மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று  மாலை 6:00 மணியுடன் நிறைவடைகிறது. அதனால் அனைத்தில அரசியலை கட்சி தலைவரும் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

பிரதமர் நரேந்திர மோடி இன்று  கன்னியாகுமாரியில் உள்ள விவேகானந்தர் பாறையில் இரண்டு நாட்கள் தியானம் செய்ய உள்ள நிலையில், தமிழக காங்கிரஸ் மற்றும் திமுக பிரதமர் மோடியின் தியான நிகழ்வை ரத்து செய்ய கோரி மனு அளித்துள்ளது.

இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திருமாலயத்தில் உள்ள கோட்டை பைரவர் திருக்கோவிலில் சாமி செய்வதற்காக இன்று  தமிழகம் வந்துள்ளார். திருச்சி விமானம் நிலையம் வந்த அமித்ஷா அதன் பின் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையுடன் சாலை மார்க்கமாக திருமயம் காலபைரவர் கோவில் வந்தடைந்தார். மத்திய அமைச்சர் அமித்ஷா சாமி தரிசனம் செய்யவுள்ளதால் , பக்தர்கள் சாமி தரிசனம் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Union Home Minister Amit Shah Samy darshan at Thirumayam Kalabhairava Temple


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->