மக்களை ஏமாற்றி தமிழக அரசு செயல்படக் கூடாது - மத்திய அமைச்சர் எல்.முருகன்.! - Seithipunal
Seithipunal


கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூரில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்பட உள்ளதாக சட்டமன்றத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இது குறித்து மத்திய இணை அமைச்சர் எல்.முருகனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். 

இதற்கு பதிலளித்து அவர் பேசியதாவது;- "ஓசூரில் பன்னாட்டு விமான நிலையம் கொண்டு வரப்போவதாக அறிவித்திருக்கிறார்கள். ஆனால், ஓசூர் அருகிலேயே பெங்களூரு விமான நிலையம் இருக்கிறது. இந்த நிலையில் ஓசூரில் பன்னாட்டு விமான நிலையம் அமைப்பது சாத்தியமாக இருக்குமா? என்பது தெரியவில்லை.

நாட்டின் வளர்ச்சிக்கு நாம் எப்போதும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அதே சமயம், மக்களை ஏமாற்றும் விதத்தில் தமிழக அரசு செயல்படக் கூடாது" என்று அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

union minister l murugan press meet about hosur airport


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->