மழை பாதிப்பு - தர்மபுரியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு.!
uthayanithi stalin visit dharmapuri flood affected peoples
வங்கக்கடலில் உருவான பெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை பெய்தது. அதிலும் தர்மபுரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை பரவலாக மழை பெய்தது. இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.
இந்த கனமழையால் மாவட்டம் முழுவதும் உள்ள நீர் நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இந்த நிலையில், தர்மபுரியில் மழை பாதிப்புகள் குறித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
நல்லம்பள்ளி ஒன்றியம், தின்னஹள்ளி ஊராட்சி வத்தல்மலை அடிவாரத்தில் இருந்த தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. அதனை ஆய்வு செய்த உதயநிதி ஸ்டாலின் பலத்தை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வரும் பணியாளர்களை ஊக்கப்படுத்தி, பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.
இதையடுத்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அரூர் பேரூராட்சி, வாணியாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட 250-க்கும் மேற்பட்ட ஆற்றோர வீதி மக்கள், அரசால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தற்காலிக நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை சந்தித்து அவர்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்தார். பின்னர் அவர்களுக்கான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
English Summary
uthayanithi stalin visit dharmapuri flood affected peoples