வாச்சாத்தி வழக்கு மேல்முறையீடு: அதிரடி காட்டிய உச்சநீதிமன்றம்! - Seithipunal
Seithipunal


வாச்சாத்தி வன்கொடுமை வழக்கில் முதன்மை குற்றவாளிகளான ஐ.எஃப்.எஸ் அதிகாரி எல். நாதன், பாலாஜி ஆகியோர் தண்டனையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

மேலும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட வனத்துறை அதிகாரிகள், தர்மபுரி நீதிமன்றத்தில் 6 வாரங்களில் சரணடைய வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கடந்த 1992 ஆம் ஆண்டு வனத்துறை காவல்துறையினர் மற்றும் வருவாய் துறை ஊழியர்கள் பாலியல் வன்கொடுமை தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 215 பேரும் குற்றவாளிகள் என தர்மபுரி மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 

அவர்களின் 126 பேர் வனத்துறை அலுவலர்கள், 84 பேர் காவல்துறையினர், 5 பேர் வருவாய் துறை ஊழியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதில் பாலியல் வன்கொடுமை தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட 7 பேர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதாக தெரிகிறது. இவர்களில் 12 பேருக்கு 10 ஆண்டுகளும், 5 பேருக்கு 7 ஆண்டுகளில் தண்டனை விதிக்கப்பட்டது. 

இதனை எதிர்த்து தண்டனை பெற்றவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தனர். 

இந்த மனுவை விசாரணை செய்த சென்னை உயர் நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்து பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vachathi case appeal Supreme Court order


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->