கடலூர் மாவட்ட மக்களுக்கு அதிர்ச்சி செய்தி.! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட மாவட்ட நிர்வாகம்.!
VADALORE THAI POOSAM 2022
தமிழகத்தில் அதி தீவிரமாக பரவிவரும் கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக, தென்னாற்காடு, வடஆற்காடு மாவட்டங்களின் மக்களால் 'ஐயா கோவில்' என்று அழைக்கப்படும், வள்ளலார் (அருள்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை - இராமலிங்க அடிகளார்) கோவிலின் 151 வது தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று கடலூர் மாவட்ட ஆட்சி தலைவர் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் விடுத்துள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, " தமிழகத்தில் நோய்த் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக 31.01.2022 வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டு உள்ளது.
மேலும், வழிபாட்டுத்தலங்களில் வரும் 18 ஆம் தேதிவரை பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று சொல்லப்பட்டுள்ளது.
எனவே, பொதுமக்கள் நலனை கருத்திற்கொண்டு வடலூர் சத்தியஞானசபை அருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையத்தில் வரும் 18 ஆம் தேதி நடைபெறும் 151 வது தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழாவின் போது பக்தர்களுக்கு அனுமதி இல்லை.
அதே சமயத்தில், தொலைக்காட்சி மூலம் ஒளிபரப்பு செய்யப்படுவதால் பக்கதர்கள் ஜோதி தரிசன நிகழ்ச்சியை வீட்டிலிருந்தே காணலாம். மேலும், இணையதளம் மூலம் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் 151 தைப்பூச ஜோதி தரிசன திருவிழாவையொட்டி நாளை 17 ம் தேதி கொடி ஏற்றதுடன் துவங்கவுள்ளது.
நாளை மறுநாள் 18 ம் தேதி தைப்பூச தினத்தையொட்டி காலை 6:00 மணிக்கு ஏழு திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்படுகிறது.
தொடர்ந்து காலை 10:00, மதியம், 1:00, இரவு, 7:00, 10:00 மற்றும் 29ம் தேதி அதிகாலை, 5:30 மணிக்கும் ஏழு திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்படுகிறது.
"அருள்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை"
English Summary
VADALORE THAI POOSAM 2022