ஆதிமொழிக்கு அவமானம்.. தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிக்கப்புக்கு கவிஞர் வைரமுத்து கண்டனம்! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநில பொது தேர்தல் வரும் மே 10ம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில் ஆளும் பாஜக, காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டமன்ற பொது தேர்தலில் பாஜக அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடும் நிலையில் தமிழர்கள் அதிகம் வசிக்கக்கூடிய தொகுதிகளிலும் கன்னடர்களையே தேர்தலில் இறக்கியுள்ளது.

கர்நாடகாவில் பெங்களூரு நகருக்கு உட்பட்ட பெரும்பாலான தொகுதிகளில் தமிழர்கள் அதிகம் வசித்து வருகின்றனர். பெங்களூர் சுற்றியுள்ள தொகுதிகளில் 15% முதல் 20% வாக்குகள் தமிழர்களுடையது. பெங்களூரில் சிவாஜி நகர், சாம்ராஜ்பேட்டை, காந்தி நகர், சாந்தி நகர் உள்பட தொகுதிகளில் வேட்பாளர்களின் வெற்றியை நிர்ணயிக்கும் சக்திகளாக தமிழர்கள் உள்ளனர். 

இந்த நிலையில் கர்நாடக மாநிலம் சிமோகாவில் தமிழர்கள் வசிக்கக் கூடிய பகுதியில் வாக்கு சேகரிக்க சென்ற பொழுது பாஜக சார்பில் தமிழ்த்தாய் வாழ்த்து ஒழிக்கப்பட்டதை பாதியில் நிறுத்திய சம்பவம் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

கர்நாடகாவில் அண்ணாமலை முன்னிலையில் தமிழ்த்தாய் வாழ்த்தை பாஜக தலைவர் ஈஸ்வரப்பா அவமதித்துள்ளார். சிவமோகா நகரில் தமிழர்களிடையே பாஜக வாக்கு சேகரித்தபோது தமிழ்தாய் வாழ்த்து ஒலிக்கப்பட்டது. அப்போது கர்நாடக பாஜக தலைவர் ஈஸ்வரப்பா தமிழ்த்தாய் வாழ்த்தை பாதியில் நிறுத்த சொல்லியுள்ளார். அதன் பிறகு தமிழ்த்தாய் வாழ்த்து நிறுத்தப்பட்ட கன்னட நாட்டு கீதத்தை ஈஸ்வரப்பா பாட வைத்துள்ளார்.

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையும் இந்த பிரச்சாரத்தில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இதைப் பற்றி எதுவும் கூறாமல் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வாயை மூடி இருந்தது தமிழர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. 

இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் தமிழ் தாய் வாழ்த்து அவமதிப்புக்கு கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழ் தாய் வாழ்த்து அவமதிப்பு குறித்து திரைப்பட பாடலாசிரியரும், கவிஞருமான வைரமுத்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில் "கர்நாடகா மேடையில்
தமிழ்த்தாய் வாழ்த்து
பாதியில் நிறுத்தப்பட்டதுகண்டு
இடிவிழுந்த மண்குடமாய்
இதயம் நொறுங்கியது. ஒலிபரப்பாமல்
இருந்திருக்கலாம்; பாதியில் நிறுத்தியது
ஆதிமொழிக்கு அவமானம். கன்னடத்துக்குள் தமிழும் இருக்கிறது; திராவிடத்திற்குள் கன்னடமும் இருக்கிறது மறக்க வேண்டாம்" என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vairamuthu tweet about thamizhthai vazhthu issue in Karnataka


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->