தாய்மண்ணில் மரிப்பேன் என்ற பிரபாகரத் தமிழனின் பேராண்மை எங்கே.. நாடு கடக்கத் துடிக்கும் ராஜபக்ச எங்கே... வைரமுத்து.!!
vairamuthu tweet for srilanka issue
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நீடித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். இந்த பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்சே குடும்பத்தினர் எடுத்த தவறான முடிவுகளை காரணம் என எதிர்க் கட்சிகளும், பொதுமக்களும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோத்தபய ராஜபக்சேவும், பிரதமர் மகிந்த ராஜபக்சேவும் பதவி விலக கோரி ஒரு மாதமாக பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டங்களின் எதிரொலியாக பிரதமர் பதவியில் இருந்து விலக முடிவு செய்த மகிந்த ராஜபக்சே நேற்று முன் தினம் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இதையடுத்து, இலங்கையில் போராட்டக்காரர்கள் மகிந்த ராஜபக்சேவின் இல்லத்திற்கு தீ வைத்தனர். இதனால் மேலும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து ராஜபக்சேஷ குடும்பத்தினர் வெளிநாடுகளுக்கு தப்பி ஓடும் காட்சிகள் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், இலங்கை விவகாரம் குறித்து வைரமுத்து தனது ட்வீட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அவரது பதிவில்,
நான்கு பக்கம்
மரணம் சூழ்ந்தபோதும்
'தாயகம் பிரியேன்
தாய்மண்ணில் மரிப்பேன்' என்ற
பிரபாகரத் தமிழனின்
பேராண்மை எங்கே...
ஊர் கொந்தளித்த
ஒரே மாதத்தில்
நாடு கடக்கத் துடிக்கும்
ராஜபக்ச எங்கே...
ஓ
சர்வதேச சமூகமே!
இப்போதேனும்
தமிழன் வீரத்திற்குத்
தலைவணங்கு என பதிவிட்டுள்ளார்.
English Summary
vairamuthu tweet for srilanka issue