வையாபுரி காடுஸ்ரீ பாலமுருகன் கோவில் மஹா கும்பாபிஷேகம்..ஏராளமான பக்தர்கள் தரிசனம்!
Vaiyapuri Kadusri Balamurugan Temple Maha Kumbabhishekam A large number of devotees have darshan
வையாபுரி காடுஸ்ரீ பாலமுருகன் கோவில் மஹா கும்பாபிஷேகவிழாவை முன்னிட்டு பசும்மாடு, முளைபாலியுடன், தீர்த்தக்குடம் எடுக்கப்பட்டன. இதில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டனர்.
சேலம் மாவட்டம் வீரபாண்டி பாலம்பட்டி கிராமம் வையாபுரி காட்டில் எழுந்தருளி இருக்கும் ஸ்ரீ பாலகணபதி ஸ்ரீ பாலமுருகன் அஷ்டபந்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் விழா திருக்குட நன்னீராட்டு பெருஞ்சாந்தி பெருவிழாவை முன்னிட்டு சித்தரை மாதம் 16-ம் தேதி விக்னேஸ்வர பூஜை எஜமானிய சங்கல்பம் புணியாக வாசனை கணபதி ஹோமம் நவக்கிரக ஹோமம் மஹாலக்ஷ்மி ஹோமம் தீபாராதனை நடைப்பெற்றது.
பின்பு தீர்த்த குடம் ஆத்து ஸ்ரீ பெருமாள் கோவிலில் இருந்து மங்கள இசை, பம்பை வானவேடிக்கை மேளதாளத்துடன் பசும்மாடு, முளைபாலியுடன், தீர்த்தக்குடம் எடுக்கப்பட்டன. இதில் 500க்கு மேல் பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ பாலகணபதி ஸ்ரீ பாலமுருகன் கோவிலுக்கு வந்தனர் பின்பு அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இவ்விழாவில் வையாபுரிகாடு பாலம்பட்டி கிராமம் ஊர்பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
English Summary
Vaiyapuri Kadusri Balamurugan Temple Maha Kumbabhishekam A large number of devotees have darshan