திருப்பூர் : பல்லடம் அருகே சரக்கு வேன் கவிழ்ந்து விபத்து.. ஒருவர் உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


பல்லடம் அருகே சரக்கு வேன் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் கிளீனர் பரிதாபமாக உயிரிழந்தார். 

கேரள மாநிலம், பாலக்காடு சித்தூர் பகுதியை சேர்ந்தரான ரபி என்பவர் ஓட்டுநராக வேலை செய்து வருகிறார். இவரிடம் அதே பகுதியை சேர்ந்த  சீனிவாசன் (வயது 23) கிளீனராக வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் இவர்கள் இருவரும் சரக்குவேன் ஒன்றில் நேற்று கேரளாவில் இருந்து கறிக்கோழி லோடு ஏற்றுவதற்காக பல்லடம் நோக்கி வந்து கொண்டிருந்தனர். 

அப்போது கவுண்டம்பாளையம் பிரிவு என்ற இடத்தின் அருகே வந்த போது ஓட்டுநரின் கட்டுபாட்டை இழந்த வேன் அருகில் இருந்த கட்டிடத்தில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இருவரும் பலத்த காயம் அடைந்தனர். 

இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் அவர்களில் சீனிவாசன் கிளீனர் ஏற்கனவே உயிரிழந்தது விட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும், படுகாயம் அடைந்த ரபிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து குறித்து தகவலறிந்து விரைந்து வந்த பல்லடம் போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Van accident in palladam cleaner death


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->