ஈரோடு: வேன் மரத்தில் மோதி விபத்து.! ஓட்டுனர் உயிரிழப்பு
Van collided with a tree in erode
ஈரோடு மாவட்டத்தில் மரத்தில் வேன் மோதிய விபத்தில் ஓட்டுநர் உயிரிழந்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் ஒத்தக்குதிரை பகுதியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன்(43). இவர் பொலவகாளிபாளையத்திலிருந்து வேனில் துணிவோடு ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தார்.
அப்பொழுது வடுகபாளையம் அருகே வேன் சென்றபோது, முன்னாள் சென்ற மற்றொரு வேனை கோபாலகிருஷ்ணன் முந்த முயன்றதால், நிலை தடுமாறி வேன் சாலை ஓரத்தில் இருந்து புளிய மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் கோபாலகிருஷ்ணன் மற்றும் அவருடன் இருந்த அண்ணாமலை ஆகியோர் படுகாயம் அடைந்துள்ளனர். இதையடுத்து அப்பகுதியில் இருந்தவர்கள் காயமடைந்த இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே கோபாலகிருஷ்ணன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் படுகாயமடைந்த அண்ணாமலை கோபிசெட்டிபாளையத்தில் இருந்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த கோபிசெட்டிபாளையம் காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Van collided with a tree in erode