மணல் கொள்ளை விவகாரம் - வெள்ளை அறிக்கை வெளியிட தமிழக அரசுக்கு வானதி சீனிவாசன் வேண்டுகோள்.! - Seithipunal
Seithipunal


மணல் கொள்ளை விவகாரத்தில் தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழக அரசு மணல் கொள்ளை விவகாரத்தில் அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்தது தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று பா.ஜ.க. எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து சட்டமன்ற வளாகத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய அவர் தெரிவித்ததாவது;-

"மணல் கொள்ளை விவகாரத்தில் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அமலாக்கத்துறை எடுக்கின்ற நடவடிக்கைகள் தொடர்பாக தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என பா.ஜ.க. சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

இன்று நீர்வளத்துறை சார்பில் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் ஒரு அழகான குவளையை கொடுத்திருக்கிறார்கள். வருங்காலத்தில் இது போன்ற ஒரு கோப்பையில் மணலை நிரப்பி, இதுதான் மணல் என்று காட்ட வேண்டிய நிலை வந்துவிடாமல் தமிழக அரசு தடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்." என்றுத் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vanathi seenivasan speech about sand kidnape


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->