தமிழ்நாட்டின் வேர்ட்ஸ்வொர்த் பிறந்த தினம்..!! - Seithipunal
Seithipunal


வாணிதாசன் :

தமிழ்நாட்டின் வேர்ட்ஸ்வொர்த் வாணிதாசன் 1915ஆம் ஆண்டு ஜூலை 22ஆம் தேதி புதுவையை அடுத்த வில்லியனூரில் பிறந்தார். இவரின் இயற்பெயர் அரங்கசாமி என்ற எத்திராசலு, புனைப்பெயர் ரமி என்பதாகும்.

இவருடைய பாடல்கள் 'தமிழ் கவிதைக் களஞ்சியம்" வெளியிட்ட புதுத்தமிழ் கவிமலர்கள் என்ற நூலிலும், ஏனைய நூல்களிலும் இடம்பெற்றுள்ளன.

இவர் 30 ஆண்டிற்கு மேல் தமிழ் ஆசிரியராக பணிபுரிந்துள்ளார். தமிழச்சி, கொடிமுல்லை ஆகிய சிறு காப்பியங்களையும், தொடுவானம், எழிலோவியம், குழந்தை இலக்கியம் ஆகிய கவிதை நூல்களையும் வழங்கியுள்ளார், எனினும் வாணிதாசன் கவிதைகள் என்னும் தொகுப்பே பெரும் புகழ் பெற்றது.

கவிஞரேறு, பாவலர் மணி, தமிழ்நாட்டுத் தாகூர், புதுமை கவிஞர் என்றெல்லாம் போற்றப்பட்ட வாணிதாசன் 1974ஆம் ஆண்டு மறைந்தார்.

பை தோராய தினம் :

பொதுவாக இத்தினம் ஐரோப்பிய நாட்கணக்குகளில் ஜூலை 22ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இத்தினம் பல்வேறு நாட்களில் கொண்டாடப்பட்டு வருகிறது. பையின் மதிப்பு எண்ணளவில் 22/7 (அ) 3.14 ஆகும்.

π தினம் முதன்முறையாக 1988ஆம் ஆண்டு கலிபோர்னியாவில் உள்ள அறிவியல் நுட்பசாலையான எக்ஸ்புளோடோறியத்தில் கொண்டாடப்பட்டது. மேலும் லாரி ஷா (Larry Shaw) என்பவர் இந்நாளை அறிமுகப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vanidasan birthday 2022


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->