எனக்கு பெண் பாருங்கள் - எம்.எல்.ஏவிடம் பெட்ரோல் பங்க் ஊழியர் கோரிக்கை.! - Seithipunal
Seithipunal


உத்தர பிரதேசம் மாநிலத்தில் உள்ள சர்க்காரி தொகுதி எம்.எல்.ஏ.-வாக இருப்பவர் பிரிஜ்பூஷண் ராஜ்புட். இவர் தனது காரில் பயணம் மேற்கொண்டபோது, மஹோபா என்ற இடத்தில் உள்ள பெட்ரோல் பங்கில் வாகனத்தை நிறுத்தி டீசல் நிரப்பினார்.

அப்போது பெட்டோல் நிரப்பும் ஊழியர் எம்.எல்.ஏ.-விடம் தனக்கு பெண் பார்க்க உதவும்படி கோரிக்கை விடுத்தார். அதாவது, பெட்ரோல் பங்க் ஊழியர் எம்.எல்.ஏ.விடம் "தனக்கு பெண் பார்க்க உதவுங்கள்" எனக் கேட்கிறார். அதற்கு எம்.எல்.ஏ. உங்களுக்கு என்ன வயது ஆகிறது? உங்களுக்கு பெண் தேடுவதற்காக என்னை தேர்ந்தெடுத்தது ஏன்?"என்றுக் கேட்டுள்ளார்.

அதற்கு அந்த ஊழியர் "44 வயது ஆகிறது. நான் உங்களுக்கு வாக்களித்துள்ளேன்" எனக் கூறுகிறார். உடனே எம்.எல்.ஏ. "வேறு யாரிடம் பெண் பார்க்க சொன்னீர்களா? நான் உங்களுக்காக பிரார்த்திக்கிறேன். பெண் தேட முயற்சிக்கிறேன். ஏனென்றால் நீங்கள் எனக்கு வாக்களித்துள்ளீர்கள்" எனக் கூறுகிறார்.

மேலும், உங்களுடைய வருமானம் எவ்வளவு?, ஒருவேளை பெண் வீட்டார் கேட்டால் கூற வேண்டும் என்றுக் கேட்டுள்ளார். உடனே அந்த ஊழியர், "6 ஆயிரம் ரூபாய். 13 பிகாஸ் நிலம் உள்ளது" என்கிறார். அதற்கு எம்.எல்.ஏ. நிலம் கோடிக்கணக்கில் மதிப்பு மிக்கது. உங்களுக்கு உதவி செய்வேன்" என்று தெரிவித்துள்ளார். இந்த உரையாடல் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

petrol bunk employee request search bride to mla


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->