பாஜக அனுப்பிய ஆளா நீ ? தூத்துக்குடி விமான நிலையத்தில் விரட்டியடிக்கப்பட்ட விசிக தொண்டர்கள்!
VCK members chased away women were writing placards for Sterlite plant
தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினரும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவருமான திருமாவளவன் தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வந்திருந்தார். அவரை வரவேற்க விடுதலை சிறுத்தைகள் கட்சி தொண்டர்களும் நிர்வாகிகளும் குவிந்திருந்தனர்.
அப்பொழுது சிலர் விடுதலை சிறுத்தைகள் கட்சி துண்டுகளை தோலில் போட்டுக் கொண்டு கையில் "தமிழகத்தின் முதுகெலும்பு ஸ்டெர்லைட் ஆலை திறக்க வேண்டும்", "ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் விழுந்தது பொருளாதாரம்" என எழுதப்பட்ட பதாகைகளை கையில் ஏந்தி திருமாவளனுக்காக காத்திருந்தனர்.
அவர்களைக் கண்ட தூத்துக்குடி மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்பொழுது சில விசிக நிர்வாகிகள் பெண்களைப் பார்த்து "யார் உங்களை கூட்டி வந்தது. பாஜக ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகள் உங்களை கூட்டி வந்தார்களா. விடுதலை சிறுத்தைகள் துண்டு யார் உங்களுக்கு கொடுத்தது" என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் அவர்கள் அணிந்திருந்த துண்டையும் கையில் வைத்திருந்த பதாகையும் கிழித்து எரிந்து விரட்டி அடித்தனர். இந்த சம்பவத்தால் தூத்துக்குடி விமான நிலையத்தில் பரபரப்பான சூழல் உண்டானது. ஸ்டெர்லைட் ஆலையில் பணிபுரிந்து வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரவாளர்கள் தங்களின் தலைவரிடம் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்கு வழிவகுமாறு கோரிக்கை வைப்பதற்காக கையில் பதாகைகளுடன் வந்ததாக கூறப்படுகிறது. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக திருமாவளவன் குரல் கொடுத்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
VCK members chased away women were writing placards for Sterlite plant