சதியா? ஜெ மர்ம மரணம்! பிரதமர் மோடிக்கு கிடுக்கிப்பிடி கேள்வி! - Seithipunal
Seithipunal


ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் உடல்நிலை மோசமடைந்தது குறித்து விசாரிக்க சிறப்புக் குழு அமைக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ள நிலையில், இதன் பின்னணியில் சதி இருப்பதாக விசிக எம்எல்ஏ ஆளூர் ஷாநவாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஒடிசா மாநிலம், பாலாசோரில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், "கடந்த ஒரு ஆண்டாக முதல்வர் நவீன் பட்நாயக்கின் உடல்நிலை மோசமடைந்து வருகிறது. 

உடல்நிலை மோசம் காரணமாக அவரால் எந்த ஒரு வேலையையும் சுயமாக செய்ய முடியவில்லை என்று அவரின் நெருங்கிய வட்டாரத்தில் பணியாற்றுபவர்கள் கூறுகிறார்கள். 

மேலும், நவீன் பட்நாயக்கின் உடல்நிலை மோசமடைந்து வருவதற்கு பின்னணியில் சதி இருக்குமோ என்றும் அவர்கள் சந்தேகிக்கிறார்கள்.

நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன் ஒடிசாவில் பாஜக வெற்றி பெற்றதும், ஒடிசாவைச் சேர்ந்த ஒருவரை நாங்கள் மாநிலத்தின் முதல்வராக்குவோம். 

அடுத்ததாக ஜூன் 10-க்குப் பின் நவீன் பட்நாயக்கின் உடல்நிலை குறித்து விசாரணை மேற்கொள்ள ஒரு சிறப்பு குழு அமைக்கப்படும். அந்தக் குழுவின் அறிக்கை பொதுமக்கள் முன்னிலையில் வெளியிடப்படும்" என்று பிரதமர் மோடி பேசியிருந்தார்.

இந்நிலையில், விசிக எம்எல்ஏ ஆளூர் ஷாநவாஸ் தனது எக்ஸ் பக்கத்தில் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், நவீன் பட்நாயக் உடல்நலம் குன்றியதன் பின்னணியில் சதி இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

முதலில் ஜெயலலிதா உடல்நலம் குன்றியதன் பின்னணியில் சதி என்று தர்ம யுத்தம் நடைபெற்றதே அதற்கு மோடி பதில் சொல்வாரா? ஒரு முதலமைச்சருக்கு என்ன நடந்தது என்பது ஒரு பிரதமருக்கு தெரியாதா? ஜெ மரணத்தில் மர்மம் எனில் காரணம் யார்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

VCK naveenpatnaik PM Narendra Modi AloorShanavas


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->