ஓசி மதுபானம் கேட்டு ஊழியருடன் தகராறு.. விசிக நிர்வாகி கைது..! - Seithipunal
Seithipunal


டாஸ்மார்க் கடை ஊழியர்களை மிரட்டி வழக்கில் விடுதலை சிறுத்தை கட்சியின் ஒன்றிய செயலாளர் கைது செய்யப்பட்டார்.

தென்காசி மாவட்டம் கடையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய செயலாளராக இருந்து வருபவர் அன்பழகன். இவர் வெங்கடம் பாடி கிராமத்தில் உள்ள அரசு மதுபானக் கடைக்கு அப்போது சென்று மதுபாட்டில்கள் மற்றும்  கட்சி வளர்ச்சி நிதி என்ற பெயரில் பணம் வசூலிப்பதாகவும் தெரிகிறது.

இந்நிலையில் அவரது கட்சி நிர்வாகி ஒருவரிடம் வெங்கடாம்பட்டி அரசு மதுபான கடையில் பணமும் மது பாட்டிலும் வாங்கி வரச் சொல்லியுள்ளார். ஆனால் அங்குள்ள ஊழியர்கள் அதற்கு மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அன்பழகன் மதுபான கடைக்கு சென்று அங்கு உள்ள பணியாளர்களை மிரட்டியுள்ளார்.

மதுபான கடை ஊழியர்களை அவர் மிரட்டிய சம்பவம் இணையத்தில் வைரல் ஆனது. இதனையடுத்து கடை ஊழியர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் கட்சி விடுதலை ஒன்றிய செயலாளர் அன்பழகன் கைது செய்யப்பட்டார். அவரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

VCK union secretary arrested


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->