வீர தீர சூரன் 4 வாரங்களுக்கு தடை! மீண்டும் அதிரவைத்த டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவு!
Veera theera sooran movie issue
டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவால் விக்ரம் நடித்த "வீர தீர சூரன்" இன்று வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இன்று உலகம் முழுவதும் "வீர தீர சூரன்" திரையரங்குகளில் வெளியாக இருந்த நிலையில், மும்பையைச் சேர்ந்த P4U நிறுவனம், படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
P4U-வின் குற்றச்சாட்டு:
தயாரிப்பு நிறுவனம் P4U-விடமிருந்து நிதியுதவி பெற்றுள்ளது.
இதற்குப் பதிலாக டிஜிட்டல் உரிமம் P4U-க்கு வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அந்த உரிமை வழங்கப்படாமல் படம் வெளியானதால், OTT-யில் விற்பதற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாக P4U புகார் தெரிவித்தது.
இந்த வழக்கை விசாரணை செய்த டெல்லி உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு:
வீர தீர சூரன் தயாரிப்பாளர் ₹7 கோடி வழங்க வேண்டும். OTT உரிமம் உறுதி செய்யும் வரை வெளியீட்டிற்கு தடைவிதிக்கப்படுகிறது
48 மணி நேரத்தில் அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிமன்றம், 4 வாரங்களுக்கு படத்தை வெளியிடவும் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
இதற்கிடையே, படத்திற்கான முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகளுக்கு பணம் திருப்பி வழங்கப்பட்டு வருகிறது.
வீர தீர சூரன் படம் குறித்து:
இயக்கம்: சித்தா புகழ் அருண்குமார்
நடிகர்கள்: விக்ரம், எஸ்.ஜே.சூர்யா, சூரஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன்
கதை: ஒரே இரவில் நடக்கும் ஆக்ஷன் த்ரில்லர்
English Summary
Veera theera sooran movie issue