கோவிலுக்கு சென்ற இடத்தில் வீரலட்சுமி, நாம் தமிழர் கட்சியினர் இடையே தள்ளுமுள்ளு! சமரசம் பேசிய போலீசார்!
Veeralakshmi naam tamilar party members argument
தமிழக முன்னேற்ற படை தலைவர் வீரலட்சுமி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது புகார் அளித்த நடிகை விஜயலட்சுமிக்கு ஆதரவாக குரல் கொடுத்தார்.
இந்நிலையில் திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் வீரலட்சுமி சுவாமி தரிசனம் செய்ய சென்றபோது நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 10க்கும் மேற்பட்டோர் ஒருங்கிணைந்து அங்கு சென்றதால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த திருவள்ளூர் நகர போலீசார் சமாதானம் பேசினர். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டு பெரும் பரபரப்பு நிலவியது.
பின்னர் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளை போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இது தொடர்பாக வீரலட்சுமி செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், நடிகை புகார் விவகாரத்தில் எவ்வளவு குற்றச்சாட்டுகள் என் மீது சுமத்தப்பட்டாலும் நான் அதை தாங்கிக் கொள்வேன்.
வீரலட்சுமி யார் என சீமானுக்கு தெரியாது. சீமானுக்கு மட்டுமல்ல எனக்கும் கூட்டம் இருக்கிறது என்றார்.
English Summary
Veeralakshmi naam tamilar party members argument