வேளாங்கண்ணி : நாளை கொடியேற்றத்துடன் விமர்சையாக துவங்கும் மாதா கோவில் திருவிழா! - Seithipunal
Seithipunal


நாகபட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணியில் புகழ்பெற்ற ஆரோக்கிய மாதா பேராலயம் அமைந்துள்ளது. இந்த பேராலயத்தில் ஏசுவின் தாயாக கருதப்படும் மாதா, கையில் குழந்தை ஏசுவுடன் காட்சி தருகிறார்.

இங்கு கிறிஸ்தவர்கள் மட்டுமின்றி அனைத்து மதங்களையும் சார்ந்த பக்தர்களும் வழிபடும் தலமாக திகழும் நிலையில், இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஆரோக்கிய மாதாவின் பிறந்தநாள் விழாவையொட்டி பேராலய ஆண்டு திருவிழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டிற்கான திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. நாளை மாலை 6 மணிக்கு கொடியேற்றப்படுவதை தொடர்ந்து, பேராலய கலையரங்கில் மாதா மன்றாட்டு, நற்கருணை ஆசீர், தமிழில் திருப்பலி ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

மேலும் மாதாவின் பிறந்த நாளாக கருதப்படும் செப்டம்பர் 8-ம் தேதி வரை தொடர்ந்து 10 நாட்கள் விழா நடைபெறுகிறது. விழா நாட்களில் சிறப்பு திருப்பலி, தேர் பவனி நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்வான ஆரோக்கிய மாதாவின் பெரிய தேர் பவனி அடுத்த செப்டம்பர் 7-ம் தேதி இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Velankanni Mata Kovil festival will start tomorrow with flag hoisting


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->