வேலூர் | செல்லும் இடமெல்லாம் வரவேற்பு - செய்த சாதனையை சொல்லி கெத்து காட்டும் கதிர் ஆனந்த்!
Vellore DMK Candidate Kathir Anand Video Campaign
இந்த மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் ஸ்டார் வேட்பாளர்கள் போட்டிடும் தொகுதிகளில் கவனிக்கத்தக்க ஒரு தொகுதியாக, திமுகவின் மூத்த தலைவர், பொதுச் செயலாளர், அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிடும் வேலூர் மக்களவைத் தொகுதியும் அமைந்துள்ளது.
இந்த தொகுதியை பொறுத்தவரை மும்முனைப்போட்டி என்று சொல்லப்பட்டாலும், கள நிலவரம் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்திற்கு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளதாக தெரிகிறது. அவர் பிரச்சாரம் மேற்கொள்ளும் இடங்களில் எல்லாம் அவருக்கு மக்கள் உற்சாக வரவேற்பை கொடுத்து வருகின்றனர்.
மேலும், திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் தனது சமூக வலைதள பக்கம் மூலம் தொகுதி மக்களுக்கு தான் செய்த சாதனைகளை ஒவ்வொன்றாக காணொளி மூலம் தெரிவித்து வருகிறார்.
அதில், "கொரோனா பேரிடர் காலத்தில் வேலூர் மக்களவைத் தொகுதி மக்கள் உடன் நான் நின்றேன்" என்ற தலைப்புடன் அவர் வெளியிட்டுள்ள காணொளியில், "கொரோனா என்ற ஒரு கொடிய நோய் இந்தியாவை வாட்டி வதைத்து. அப்போது சகோதர சகோதரிகள் பலர் அரிசி, பருப்பு கூட இல்லாமல், சாப்பாட்டுக்கே வழி இல்லாமல் இருந்தனர்.
அப்படி ஒரு கடினமான சூழ்நிலையில் நாங்கள் அவர்களுக்கு உறுதுணையாக நின்று உதவி செய்தோம். ஆனால் இதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் மத்திய அரசாங்கம் விளக்கேற்றுங்கள், ஒலி எழுப்புங்கள் என கொரோனாவை தடை செய்வதற்கு உண்டான முயற்சியை செய்வதாக என்று சொல்லிக் கொண்டிருந்தது.
தொகுதி மேம்பாட்டு நிதியாக எங்களுக்கு ஒரு வருடத்திற்கு 5 கோடி ரூபாய் தருவார்கள். ஆனால் இந்த கொரோனா காலத்தில் அந்த நிதியை கூட நிறுத்தி விட்டார்கள். இந்த ஐந்து வருடத்தில் 25 கோடி ரூபாய் தொகுதி மேம்பாட்டு நிதியாக வந்திருக்க வேண்டும். ஆனால் மத்திய அரசாங்கம் 12.5 கோடி ரூபாய் மட்டுமே கொடுத்தது.
இருந்தாலும் எனக்கு கொடுக்கப்பட்ட அந்த 12.5 கோடி ரூபாயில் ஒரு கோடி ரூபாயை தமிழக அரசுக்கு கொரோனா நிவாரண நிதியாக வழங்கினேன்.
மேலும், இந்த கொரோனா காலகட்டத்தில் பல மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் சிலிண்டர் பற்றாக்குறை இருந்தது. நம்ம வேலூரை பொறுத்தவரை இது குறித்து உடனடியாக தமிழக முதல்வரை தொடர்பு கொண்டு கோரிக்கை வைத்தேன். உடனடியாக அவர் வேலூர் தொகுதிக்கு தினம் தினம் ஆக்சிஜன் சிலிண்டர் வழங்க நடவடிக்கை மேற்கொண்டு இருந்தார்.
இதன் மூலம் எத்தனை உயிரை நம்முடைய தமிழக முதலமைச்சர் காப்பாற்றி உள்ளார் என்பது தெரியுமா? அப்படிப்பட்ட இந்த மனிதநேய மக்களாட்சி தொய்வு இன்றி தொடர்ந்திட உதய சூரியனுக்கு வாக்களிக்க வேண்டும்" என்று கதிர் ஆனந்த் கேட்டுக் கொண்டுள்ளார்.
English Summary
Vellore DMK Candidate Kathir Anand Video Campaign