#வேலூர் || கன மழையின் காரணமாக.. பழைய சுவர் இடிந்து விழுந்து ஹோட்டல் ஊழியர் உயிரிழப்பு! - Seithipunal
Seithipunal


தமிழக முழுவதும் கடந்த சில நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக வட தமிழக மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக இரவு நேரத்தில் கன மழை பெய்து வருகிறது. அதன்படி வேலூர் மாவட்டத்தில் பெய்த கனமழையின் காரணமாக வேலூர் பழைய பேருந்து நிலையம் அருகே உணவக சமையல் அறையின் பழைய பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்ததில் ஹோட்டலில் வேலை செய்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மேலும் இந்த விபத்தில் படுகாயம் அடைந்த மேலும் 2 பேர் வேலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்த பெண்ணின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக வேலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து வேலூர் வடக்கு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் தனியார் உணவகத்தை காவல்துறையினர் தற்காலிகமாக மூடியுள்ளனர்.

தமிழக முழுவதும் வடகிழக்கு பருவமழைக்கும் முன்பு அனைத்து பழைய கட்டிடங்களையும் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் கடந்த மாதமே தமிழக அரசின் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவிட்டிருந்த நிலையில் வேலூரில் இந்த துயர சம்பவம் அரங்கேறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்குப் பிறகாவது அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் வடகிழக்கு பருவ மழை தொடங்குவதற்கு முன்பு பழமையான கட்டிடங்களில் முறையாக ஆய்வு செய்யது உரிய நடவடிக்கை வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vellore hotel worker died old wall fell down cause of heavy rain


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->