வேலூர் : ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடை கொள்ளை வழங்கி ஒருவர் கைது.!
vellore jos allukas shop robbery case
கேரளாவை சேர்ந்த ஜாய் ஆலுக்கா என்பவரின் ஜோஸ் ஆலுக்காஸ் நிறுவனத்தின், வேலூரில் உள்ள கிளை கடையின் சுவரை ஓட்டை போட்டு நகை கொள்ளை அடிக்கப்பட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாநகரின் முக்கிய பகுதியாக கருதப்படும் அண்ணா சாலை பகுதியில் அமைந்துள்ள ஜோஸ் ஆலுக்காஸ் கடையின் பின்புறம் சுவரை ஓட்டை போட்டு நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 15ஆம் தேதி நடந்த கொள்ளை சம்பவத்தில் 8 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் கொள்ளை முடிக்கப்பட்டுள்ளது. இரவு 10 மணி வரை இந்த கடை செயல்பட்டு வந்தது. அதன் பிறகு கடையை மூடி விட்டு சென்றுள்ளனர். காலை கடையை திறந்தபோது, கடையின் பின்புற சுவரில் ஓட்டை போட்டு நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.
தற்போது தான் கடை திறக்கப்பட்டுள்ளதால் நகைகள் எவ்வளவு திருடப்பட்டது என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. சிசிடிவி கேமரா பதிவில் கொள்ளையர்கள் சிங்க முகமூடி அணிந்துவந்து நகைகளை கொள்ளையடித்து சென்றதது தெரியவந்தது.
இந்நிலையில், வேலூர் நகைக்கடை கொள்ளை வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வேலூர் குச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்த ராமன் (வயது 27) என்பவரை தனிப்படை போலீசார் இன்று கைது செய்து உள்ளனர்.
English Summary
vellore jos allukas shop robbery case