வேலூர்: ஓடும் ரயிலில் கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் தொல்லை! ரயிலிலிருந்து தள்ளிவிட்ட கொடூரம்!
Vellore Train Pregnant Lady Harassment
கோயம்புத்தூர் - திருப்பதி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த கர்ப்பிணி பெண்ணை பாலியல் தொல்லைக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் கீழே தள்ளிவிட்ட கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் - திருப்பதி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் வேலூர் அருகே கே.வி. குப்பம் பகுதியில் வந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது.
ரயில் சென்று கொண்டிருந்தபோது இரண்டு நபர்கள் கர்ப்பிணி பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்த முயன்றனர். அவர் எதிர்ப்பு தெரிவித்ததால், அவரை இரக்கமின்றி ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டுள்ளனர்.
இதில் கை, கால்கள் முறிந்து பலத்த காயமடைந்த பெண்ணை ரயில்வே போலீசார் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
English Summary
Vellore Train Pregnant Lady Harassment