வேங்கைவயல் | டிஎன்ஏ பரிசோதனைக்கு மறுத்த எட்டு பேர் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்! - Seithipunal
Seithipunal


வேங்கைவயல் விவகாரத்தில் டிஎன்ஏ பரிசோதனைக்கு மறுத்த எட்டு பேர், தற்போது புதுக்கோட்டை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகி தங்களது விளக்கத்தை தெரிவித்து வருகின்றனர். 

புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனித மலம் கலக்கப்பட்ட விவகாரத்தில் இதுவரை குற்றவாளிகள் யார் என்பது தெரியவரவில்லை. 

இந்த விவகாரத்தில் சாதியப்போக்கான அரசியல் மேற்கொண்டு, குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில் ஆளும் அரசு காலம் தாழ்த்தி வருவதாக பல்வேறு தரப்பில் இருந்தும் குற்றச்சாட்டுகள் எழுந்தது.

இதற்கிடையே, இந்த விவாகரத்தில் சந்தேகிக்கப்படும் 11 பேரை டிஎன்ஏ பரிசோதனைக்கு உட்படுத்த சிபிசிஐடி போலீசார் முடிவு செய்து, நீதிமன்ற அனுமதியுடன் களத்தில் இறங்கியது.

இதில், வேங்கைவயல் கிராமத்தை சேர்ந்த எட்டு பேர், நாங்கள் இந்த டிஎன்ஏ பரிசோதனையை செய்து கொள்ள மாட்டோம் என்று மறுப்பு தெரிவித்தனர்.

ஏற்கனவே இந்த மலம் கலக்கப்பட்ட நீரால் நாங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட எங்களையே குற்றவாளியாக முன்னிறுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர்கள் மறுப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில், டிஎன்ஏ பரிசோதனைக்கு மறுத்து வந்த எட்டு பேர், தற்போது புதுக்கோட்டை மாவட்ட சிறப்பு வன்கொடுமை நீதிமன்றத்தில் ஆஜராகி உள்ளனர்.

சிபிசிஐடி போலீசார் தாக்கல் செய்த மனுவை தொடர்ந்து, தற்போது மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜராகி 8 பேரும் தங்களது பதிலை தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vengaivayal case DNA Issue june 30


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->