வேங்கைவயல் விவகாரம் | உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!  - Seithipunal
Seithipunal


புதுக்கோட்டை : கந்தர்வகோட்டை அடுத்த வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்டிருந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மர்ம நபர்கள் சிலர் மலம் கலந்ததாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தெரியவந்தது. 

குடிநீர் தொட்டியில் மனித கழிவை கலந்தவர்களை கைது செய்ய வேண்டும் பல அரசியல் காட்சிகள் அழுத்தம் கொடுத்த நிலையில், வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டார்.

தொடர்ந்து 3 மாதமாக விசாரணை செய்துவரும் சிபிசிஐடி போலீசார், தற்பொழுது வரை யாரையும் கைது செய்யவில்லை. தமிழகத்தை அதிரவைத்த ஒரு சம்பவம், "இன்னும் நாறி கொண்டு தான் இருக்கிறது முதல்வரே" என்று ஊடங்கங்கள் கடும் விமர்சனத்துக்கு ஆளான தமிழக போலீசாரின் நடவடிக்கை மர்மாகவே உள்ளது.

யாரையோ காப்பாற்ற நடக்கும் சதியா? இல்லை சாதி ஓட்டு பாதிக்கும் என்ற அமைதியா? என்ற பல்வேறு சந்தேகங்களுக்கு வித்திட்டுள்ளது இந்த வேங்கைவயல் விவகாரம்.

இந்த நிலையில், வேங்கைவயலில் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட விவகாரம் : சிபிசிஐடி விசாரணையை கண்காணிக்க உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதியை ஏன் நியமிக்க கூடாது? என சென்னை உயர் நீதிமன்ற கேள்வி எழுப்பியுள்ளது.

இந்நிலையில், வேங்கை வயலில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரத்தை உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையிலான குழு விசாரணைக்கு மாற்றக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஒரு மாநிலத்தில், ஒருகுறிப்பிட்ட பகுதியில் நடக்கும் சம்பவத்தை விசாரணை செய்ய தான் உயர்நீதிமன்றம் உள்ளது என்று கூறிய நீதிபதி, சென்னை உயர்நீதிமன்றத்தை நாடவும் மனுதாரர்களுக்கு நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Vengaivayal case SC order


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->