கால்நடை மருத்துவ படிப்புக்கு நாளை முதல் விண்ணப்பம் தொடக்கம்.! - Seithipunal
Seithipunal


இளநிலை கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பம் நாளை முதல் தொடங்குகிறது.

தமிழ்நாடு கால்நடை மருத்துவர் அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு, சேலம், தலைவாசல், உடுமலைப்பேட்டை, தேனி ஆகிய 7 இடங்களில் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் ஐந்தரை ஆண்டுகள் கொண்ட கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு படிப்புக்கு (BVSc &AH/BTech) 660 இடங்கள் நிரப்பப்படுகின்றன.

இந்த நிலையில் நடப்பாண்டுகாண BVSc & AH படிப்புக்கு படிப்பதற்கான மாணவர் சேர்க்கைக்கு நாளை முதல் வரும் ஜூன் 30-ம் தேதி வரை என்ற https://adm.tanuvas.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அயல்நாட்டு வாழ் இந்தியர், அயல்நாட்டு வாழ் இந்தியரின் வாரிசுகள், அயல்நாட்டு வாழ் இந்தியரின் நிதி ஆதரவில் உள்ளோர் மற்றும் அயல் நாட்டினர் ஆகியோருக்கான இட ஒதுக்கீடு குறித்து மேலே உள்ள இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vetenery medical college application from tomorrow


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->