கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று காலை வெளியீடு.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு கடந்த ஜனவரி 27ம் தேதி முதல் சென்னையில் நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு கடந்த ஜனவரி 27ம் தேதி முதல் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் நாள் சிறப்பு பிரிவில் மாற்றுத்திறனாளிகள் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களின் வாரிசுகள் மற்றும் விளையாட்டு பிரிவினருக்கான சிறப்பு பிரிவு நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து அதற்கு அடுத்த இரண்டு நாட்கள் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீடுகான நேரடி கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. அதன்பின்னர் வரும் 30ஆம் தேதி முதல் பொது கலந்தாய்வு மாணவர் சேர்க்கை இணையதளங்கள் வாயிலாக நடைபெற உள்ளது.

இந்த நிலையில் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு ஆன்லைனில் இன்று முதல் தொடங்குகிறது. மேலும், இன்று முதல் பிப்ரவரி 5ஆம் தேதி மாலை 5 மணி வரை கலந்தாய்வு நடைபெறுகிறது.

இந்த நிலையில், இன்று காலை 10 மணிக்கு கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியாகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Veterinary Doctor councelling rank list


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->