கால்நடை மருத்துவ படிப்பு விண்ணப்பம் நிறைவு.. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு குறைவு.. - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் மற்றும் இதர கால்நடை மருத்துவக் கல்லூரிகளில் இளநிலை பட்டப் படிப்புகளுக்கு விண்ணப்பிதற்கான கால அவகாசம் கடந்த அக்டோபர் 3-ம் தேதியுடன் நிறைவடைந்தது.

தமிழகத்தில், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு, சேலம் தலைவாசல், உடுமலைப்பேட்டை, தேனி வீரபாண்டி ஆகிய 7 இடங்களில் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் உள்ளன.

இந்த கல்லூரிகளில் ஐந்தரை ஆண்டுகள் கொண்ட கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு படிப்புக்கு (பி.வி.எஸ்சி), பி.வி.எஸ்சி - ஏ.ஹெச்) 480 இடங்கள் இருக்கின்றன. இதில், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 72 இடங்கள் (15 சதவீதம்) போக, மீதமுள்ள 408 இடங்கள் மாநில அரசுக்கு உள்ளன.

இதில், மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கு 13,470 பேரும், தொழில்நுட்ப பட்டப்படிப்புகளில் சேர்வதற்கு 2,744 பேரும் என மொத்தம் 16,214 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

கடந்த ஆண்டு 18,760 பேர் விண்ணப்பித்து இருந்த நிலையில், இது கடந்த ஆண்டை விட விண்ணப்பப்பதிவு குறைந்திருப்பதை புள்ளி விவரங்கள் விண்ணப்பப்பதிவு முடிந்துள்ள நிலையில், விரைவில் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு, முறைப்படி கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெற இருக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Veterinary medicine course application details


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->