வெளியானது வேட்டையன் படத்தின் மனசிலாயோ பாடல் வீடியோ.!! - Seithipunal
Seithipunal


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 10-ந் தேதி வெளியான திரைப்படம் 'வேட்டையன்'. இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் பகத் பாசில், ராணா, மஞ்சு வாரியர் உள்ளிட்ட பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த படம் தமிழ்நாடு மட்டுமல்லாமல் அண்டை மாநிலங்களில் வசூல் சாதனை படைத்து வருகிறது. ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் உலகளவில் ரூ.350 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது.

இப்படத்தின் வெற்றிக்காக நன்றி தெரிவிக்கும் நிகழ்வில் இயக்குநர் த. செ. ஞானவேல் உள்பட படக்குழுவினர் கலந்துகொண்டனர். இந்தப் பயணத்தில் பயணித்த அனைவருக்கும் தங்கள் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவிக்கும் வகையில், படக்குழுவினர் அனைவருக்கும் அசைவ விருந்து வழங்கியது.

இப்படத்தில், அனிருத் இசையமைத்த 'மனசிலாயோ' பாடல் வெளியீட்டுக்கு முன்பே ரசிகர்களிடையே பெரிய கவனம் பெற்றதுடன் இன்ஸ்டாகிராமில் அதிக அளவில் ரீல்ஸ் செய்யப்பட்டது. இந்த நிலையில், 'மனசிலாயோ' பாடலின் வீடியோவை தயாரிப்பு நிறுவனம் இன்று வெளியிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vettaiyan movie manasilayo song vedio release


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->