குடியரசுத் துணைத்தலைவா் தமிழகம் வருகை! - Seithipunal
Seithipunal


குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தன்கா் இன்று, நாளை மகாராஷ்டிரா, தமிழகம் மாநிலங்களிலும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் பயணம் மேற்கொள்ள உள்ளார். 

இன்று சென்னை வழியாக புதுச்சேரிக்கு வரும் ஜகதீப் தன்கா் மறுநாள் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சுவாமி தரிசனத்திற்காக செல்கிறார். 

இது குறித்து குடியரசு துணை தலைவர் செயலாளர் வட்டாரங்கள் தெரிவித்திருப்பதாவது, குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீசன் 28, 29 தேதிகளில் மகாராஷ்டிரம் தமிழகத்திற்கு பயணம் மேற்கொள்கிறார். 

இன்று டெல்லியில் இருந்து விமான மூலம் புறப்பட்டு முற்பகல் மும்பையில் உள்ள மகாராஷ்டிரா சட்டப்பேரவை வளாகத்தில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். 

பிற்பகல் மும்பையில் இருந்து புறப்பட்டு மாலை 4 மணியளவில் சென்னை வந்து அங்கிருந்து புதுச்சேரி செல்கிறார். புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் நடைபெறும் விழாவில் பங்கேற்க உள்ளார். மேலும் 'வளர்ச்சியடைந்த இந்தியா 2047' என்ற தலைப்பில் பல்கலைக்கழக மாணவர்களுடன் கலந்துரையாடுகிறார். 

திங்கட்கிழமை காலை புதுச்சேரியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் சிதம்பரம் சென்று நடராஜர் கோவிலில் சுவாமி தரிசனம் மேற்கொள்கிறார். இந்த ஆன்மீக நிகழ்வுகளுக்கு பின்னர் சிதம்பரத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் சென்னை செல்கிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vice President Tamil Nadu visit


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->