முயற்சி செய்ததால் தலைசிறந்த நடிகர்.! முடிவெடுத்ததால் தமிழ்நாட்டிற்கே நாளைய முதல்வர் - பரபரப்பை ஏற்படுத்தும் போஸ்டர்.!! - Seithipunal
Seithipunal


முயற்சி செய்ததால் தலைசிறந்த நடிகர்.! முடிவெடுத்தால் தமிழ்நாட்டிற்கே நாளைய முதல்வர் - பரபரப்பை ஏற்படுத்தும் போஸ்டர்.!!

ஜூன் 22 ஆம் தேதியான இன்று நடிகர் விஜய்-யின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அவரது ரசிகர்கள் போஸ்டர்களை ஒட்டி பிரமாண்டமாகக் கொண்டாடி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல், இணையதளங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் விஜய் குறித்த தகவல்கள், போஸ்டர்கள், அவரது படம் குறித்த அப்டேட்டுகளே அதிகம் காணப்படுகிறது.

இதற்கிடையே நடிகர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் பல்வேறு ஊர்களில் ஒட்டியுள்ள போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த போஸ்டர்களில் விஜய்யை அரசியலுக்கு அழைக்கும் விதமான வாசகங்களே அதிகம் இடம்பெற்றுள்ளன. 

இந்த நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில், “நாங்கள் வணங்கும் தலைவா..!  நாளைய தமிழகத்தின் முதல்வா..!” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  

அதேபோல், மதுரை வடக்கு மாவட்டத்தில்  ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில், “அன்று நீ முயற்சி செய்ததால் தலைசிறந்த நடிகர்.! இன்று முடிவெடுத்தால் தமிழ்நாட்டிற்கே நாளைய முதல்வர்.!! என்று அச்சிடப்பட்டுள்ளது. இது தொடர்பான புகைப்படம் வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vijay birthday celebration poster viral


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->