2026-ல் விஜய் குடும்ப ஆட்சியைத் துடைத்தெறிவார் - த.வெ.க பதிலடி..! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய், தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கி அதன் முதல் மாநாட்டை விக்கிரவாண்டியில் கடந்த மாதம் 27-ந் தேதி பிரமாண்டமாக நடத்தினார். இந்த மாநாட்டில் பேசிய விஜய், திமுகவை அரசியல் எதிரி என்று மறைமுகமாக விமர்சித்தார். விஜயின் இந்த பேச்சுக்கு தி.மு.க. மூத்த நிர்வாகிகள் சிலர் மட்டும் பதிலடி கொடுத்தார்கள். 

அதன் படி சென்னையில் கடந்த மாதம் 28-ந்தேதி நடைபெற்ற தி.மு.க. சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் கூட்டத்தில், 'எதைப்பற்றியும், யாரைப்பற்றியும் கவலைப்பட வேண்டாம்' என்று விஜய்யின் பெயரை குறிப்பிடாமல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. 

இந்த நிலையில் நேற்று சென்னை கொளத்தூர் தொகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல் அமைச்சர் முக ஸ்டாலின் விஜய் குறித்து மறைமுகமாக விமர்சித்தார். அதாவது, புதிதாக கட்சி தொடங்குபவர்கள் கூட திமுகவை அழிக்க நினைக்கிறார்கள். இவர்களுக்கு எல்லாம் பதில் அளித்து நேரத்தை வீணடிக்க நான் விரும்பவில்லை என்று கூறினார்.

முதல் அமைச்சர் ஸ்டாலினின் இந்த விமர்சனத்திற்கு தவெக கட்சியின் செய்தி தொடர்பாளர் வீர விக்னேஷ்வரன் பதிலளித்துள்ளதாவது:-"முதல் அமைச்சர் ஸ்டாலின் எங்கள் தலைவரைத் தரக்குறைவான வார்த்தைகளில் விமர்சித்து இருக்கிறார். இது துரதிஷ்டவசமானது. அரசியல் எதிரிகளுக்கு இதுபோல பதில் கொடுப்பது சரியான போக்கு இல்லை. 

தமிழகத்தில் தங்கள் குடும்ப ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ள அரசியல் எதிரிகளைத் தரக்குறைவாகப் பேசுவது திமுகவின் மரபணுவிலே இருக்கிறது. முதலமைச்சரின் பேச்சும் அதைத்தான் காட்டுகிறது. 1970-களில் இந்த குடும்ப ஆட்சிக்கு எதிராகவே எம்ஜிஆர் கலகம் செய்தார். இந்த குடும்ப ஆட்சியை அகற்றியும் காட்டினார். வரும் 2026-ல் இந்த வரலாறு மீண்டும் திரும்பும். 2026-ல் இந்த குடும்ப ஆட்சியைத் துடைத்தெறிந்துவிட்டு, ஜனநாயக ஆட்சியை விஜய் அமைப்பார்" என்றுத் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vijay clean family political at coming 2026


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->