கொடி அறிமுக விழாவில் அபராதம் கட்டிய த.வெ.க தலைவர்.! நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


சென்னை பனையூரில் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ கட்சிக் கொடியினையும், கட்சியின் பாடலையும் இன்று அறிமுகம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு விஜய் TN 37 DR 1111 என்ற பதிவு எண் கொண்ட இனோவா காரில் வந்திருந்தார். 

இந்த வாகனம் கோவை தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட வாகனம் ஆகும். இந்த வாகனம் சென்னையில் இயக்கப்பட்டு வரும் நிலையில், இதன் மீது 4 ஆயிரத்து 500 ரூபாய் அபராதம் நிலுவையில் இருப்பதாக தகவல் வெளியாகி வைரலானது.

இந்த கார் குறித்து பரிவாகன் செயலியில் ஆய்வு செய்த போது, இதுவரை 4,700 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு 200 ரூபாய் மட்டுமே அபராதம் செலுத்தப்பட்டு, 4,500 ரூபாய் அபராதம் நிலுவையில் உள்ளது என்பதும், மாசு கட்டுப்பாட்டு வாரிய தரச் சான்றிதழ் தேதியும் கடந்த ஆண்டு மே மாதமே முடிந்து விட்டதாகவும் Screen Record ஒன்று வைரலானது.

இந்த காரில் விஜய் பயணித்துள்ளார். இந்தச்செய்தி சமூக வலைதளங்களில் பரவியதை தொடர்ந்து, அபராத தொகையை செலுத்த அவர் அறிவுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vijay fine pay for car register issue


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->