மாநில அரசுக்கு முழு சுதந்திரம்... என்சிஆர்டி திட்டத்திற்கான நிரந்தர தீர்வு கொடுத்த விஜய்.!
Vijay gave permanent solution NCRD exam
கல்வி சுகாதாரத்தை பொது பட்டியலில் இருந்து மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
சென்னை உள்பட 19 மாவட்டங்களை சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு தமிழக வெற்றி கழகம் சார்பில் கல்வி விருது வழங்கும் இரண்டாம் கட்ட நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய விஜய், 1975 க்கு முன்னால் மாநில பட்டியலில் தான் கல்வி என்பது இருந்தது. அதன் பிறகு தான் மத்திய அரசின் கீழ் வந்தது. ஒரே நாடு, ஒரே பாடத்திட்டம், ஒரே தேர்வு என்பது கல்வி கற்கும் நோக்கத்திற்கு எதிரானது.
ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஏற்றவாறு பாடத்திட்டம் இருக்க வேண்டும். மாநில கல்வி திட்டத்தில் படித்து விட்டு என்சிஆர்டி திட்டத்தில் தேர்வு, மருத்துவ படிப்புகளுக்கான தேர்வு கடினமான ஒன்று.
இதற்கு எல்லாம் நிரந்தர தீர்வாக கல்வி சுகாதாரத்தை பொது பட்டியலில் இருந்து நீக்கி மாநில பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும். இதில் சிக்கல் இருப்பினும் அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்து பொதுப்பட்டிகளில் கல்வி சுகாதாரத்தை கொண்டு வர வேண்டும். கல்வி சுகாதாரத்தில் மாநில அரசுக்கு முழு சுதந்திரத்தை தர வேண்டும் என தெரிவித்துள்ளார்.
English Summary
Vijay gave permanent solution NCRD exam