விஜய் டிவி தொகுப்பாளினி ப்ரியங்கா தேஷ்பாண்டேவுக்கு இரண்டாவது திருமணம்..!
Vijay TV anchor Priyanka Deshpande second marriage
விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே. இவருக்கு இரண்டாவது திருமணம் நடந்து முடிந்துள்ளது. வசி என்பவரை அவர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளார்.
பிரியங்காவுக்கு கடந்த 2015 ஆம் ஆண்டு விஜய் டிவி டெக்னீசியனாக பிரவீன் என்பவரை திருமணம் செய்தார். ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். இதுவரையும் ஏன் இருவருக்கும் விவாகரத்து ஆனது என்பது கூட தெரியாது.
இந்த நிலையில் இன்று பிரியங்கா இரண்டாவது திருமணம் செய்துகொண்ட வீடியோ மற்றும் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றது. நெருக்கமான நண்பர்கள் மற்றும் பெற்றோர்கள் மட்டுமே இந்த திருமணத்தில் கலந்துகொண்டுள்ளனர்.
இவர் இந்த துறைக்கு வந்த 20 வருடம் ஆகின்றது. இதுவரை ஒரு லட்சிய தொகுப்பாளினியாக திகழ்ந்து வருகிறார். இவருடைய இரண்டாவது திருமணத்திற்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
English Summary
Vijay TV anchor Priyanka Deshpande second marriage