விக்கிரவாண்டி இடைத்தேர்தல் : நாதக வேட்பாளர் அறிவிப்பு!
Vikravandi BY Election NTK Candidate
விக்கிரவாண்டி திமுக சட்டமன்ற தொகுதி உறுப்பினர் புகழேந்தி திடீரென காலமானார். விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதனை தொடர்ந்து விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வரும் ஜூலை 10ஆம் தேதி நடைபெறும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அறிவித்தார்.
மேலும், விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு ஜூன் 14ஆம் தேதி (இன்று முதல்) தொடங்கி 21ஆம் தேதி வரை வேட்புமனு செய்யலாம்.
விக்கிரவாண்டி சட்டப்பேரவை இடைத்தேர்தல் ஜூலை 10ஆம் தேதி நடைபெற்று ஜூலை 14ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் சத்யபிரதா சாகு அறிவித்தார்.
இந்த நிலையில், இந்த விக்கிரவாண்டி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா போட்டியிடுவார் என அக்கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
முன்னதாக விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள அன்னியூர் சிவா திமுக விவசாய தொழிலார் அணி செயலாளராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Vikravandi BY Election NTK Candidate