அந்த 2000 வாக்குகள்? நாம் தமிழர் கட்சிக்கு அதிர்ச்சி கொடுத்த தேர்தல் முடிவு!
Vikravandi By Election Result NTK Vote
விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் சிவா 1,23,688 வாக்குகள் பெற்று வெற்றிபெற்று உள்ளார். மேலும் அவர் 67400 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்துள்ளார்.
இரண்டாவது இடத்தில் பாமக வேட்பாளர் 56,248 வாக்குகளை பெற்றுள்ளார். மூன்றாவது இடத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா 10,520 வாக்குகளை பெற்றுள்ளார்.
இந்த தேர்தலைப் பொறுத்தவரை அதிமுக புறக்கணித்து இருந்தது. அதிமுகவின் வாக்குகளை பெறுவதற்காக போட்டியிட்ட மூன்று கட்சிகளுமே மும்மரமாக செயல்பட்டன.
இதில் நாம் தமிழர் கட்சி அதிமுகவின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கெல்லாம் ஆதரவு தெரிவித்து, அதிமுக மற்றும் தேமுதிகவினர் தங்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று, கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானே பிரச்சாரத்தின் போது ஆதரவு கேட்டிருந்தார்.
மேலும் அதிமுகவின் வாக்குகள் தங்களுக்கு வரும் என்று நாம் தமிழர் கட்சியினர் பெரிதும் நம்பி இருந்தனர். ஆனால் இந்த தேர்தல் முடிவில் கடந்த சட்டமன்ற பொது தேர்தல் மற்றும் மக்களவை பொது தேர்தல்களை விட நாம் தமிழர் கட்சி சுமார் 2000 வாக்குகள் மட்டுமே அதிகமாக பெற்றுள்ளது.
அப்படி என்றால் அந்த 2000 வாக்குகளும் அதிமுகவினரின் வாக்குகளா? அல்லது நாம் தமிழர் கட்சியின் வாக்கு வங்கி அதிகரித்துள்ளதா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
எது எப்படி ஆயினும் இந்த விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி 10,520 வாக்குகளை பெற்றதுடன், டெபாசிட்டையும் இழந்து படுதோல்வியை சந்தித்து இருப்பது மட்டும் உண்மை.
English Summary
Vikravandi By Election Result NTK Vote